சக்தியர் சங்கமம்!

அஷ்டமங்கல தரிசனம்

சிவாகம சாஸ்திரம் குறிப்பிடும் எண்வகை மங்கலப் பொருள்கள்: சங்கு, தீபம், ஸ்வஸ்திகம், தர்ப்பணம் (கண்ணாடி), கொடி, மரச் சீப்பு, சக்தி, யானை ஆகியன. இவற்றை ஆலயங்களிலோ, வீட்டிலோ காண நேர்ந்தால் மகாலட்சுமியாக எண்ணி தரிசிக்க வேண்டும்.

அதேபோல், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்திட வேண்டுமெனில் எண்வகை மங்கலப் பொருள்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துத் தினமும் வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஞானநூல்கள், அந்தப் பொருள்களையும் பட்டியலிடுகின்றன. அவை: குங்குமச் சிமிழ், சந்தனம், தாம்பூலம், கொட்டைப்பாக்கு, சங்கு, கண்ணாடி, காமாட்சி விளக்கு, தாமரை. இவை வீட்டில் இருந்தாலும் பெண்களால் வழிபடப்பட்டாலும் அதனால் மகாலட்சுமி ஈர்க்கப்படுவாள் என்கிறது அறப்பளீச சதகம்.

பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரம், அஷ்டமி திதி ஆகிய நாள்களில் அஷ்ட மங்கலங்களை வைத்து பூஜை செய்துவந்தால் இல்லத்தில் வறுமை நெருங்காது, தன வரவுக்குக் குறை இருக்காது.

- கே.ராஜலட்சுமி குமாரசிவம், சென்னை-44

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick