ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நவம்பர் 7 முதல் 20-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

‘எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்’ என்று நினைப்பவர்கள் நீங்கள்தான். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வி.ஐ.பி-களால் நன்மை உண்டாகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

புதன் 8-ம் இடத்தில் மறைந்திருப் பதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. வாகனங்களைக் கவனமாகக் கையாளவும்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.  உத்தியோகத்தில், உயர் அதிகாரி உங்களைக் கடிந்துகொண்டாலும் அன்பாக நடந்துகொள்வார். உடன் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை. கலைத்துறையினருக்குக் கலைத்திறன் வளரும்.

மதிப்பும் மரியாதையும் கூடும் காலம் இது


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களுடைய பேச்சும் சுத்தமாக இருக்கும். ராகு வலுவாக    3-ம் இடத்தில் நிற்பதால் தைரியமாக எதையும் செய்து முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர் களால் ஆதாயம் உண்டு.

புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன்     6-ம் இடத்தில் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு, தொண்டை வலி வந்து நீங்கும். உடல்நலனில் அக்கறை தேவை. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

‘துணிவே துணை’ என்று நினைக்கும் நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick