ஆலயம் தேடுவோம் - கீழக்குறிச்சி சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில் - மனக்குறை தீர்க்கும் மாகாதேவன்!

எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: சே.அபினேஷ்

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் மொழி. இதற்கு இரண்டு பொருள் கொள்ளலாம். ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஒன்று; முறையற்ற அரசியல் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மற்றொரு பொருள். இரண்டு பொருள்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவைதான். ஓர் அரசாங்கம் தர்மநெறிப்படி நடக்க வேண்டுமானால், அரசை ஏற்று நடத்துபவருக்கு இறை நம்பிக்கை இருக்க வேண்டும். இறை நம்பிக்கை என்பது ஆலயங்களைச் சார்ந்தே அமைவது. எனவே, ஆலயங்களில் நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று தெய்வ சாந்நித்தியத்துடன் திகழும்போதுதான், அரசும் தர்மநெறிப்படி இயங்கும்.

இதன் காரணமாகத்தான் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் எண்ணற்ற கோயில்களை நிர்மாணித்து, அங்கே நித்திய பூஜைகளும் விழாக்களும் தடையின்றி நடைபெற மானியங் களையும் அளித்துள்ளனர். பிற்காலத்தில் மானியங்களை மற்றவர்கள் அபகரித்துக் கொள்ளாதபடி கல்வெட்டுகளிலும் பொறித்துவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick