சாஸ்தா தரிசனம்! - அபூர்வத் தகவல்கள்

மஹாசாஸ்த்ரு ப்ரியதாஸன் - வெ.அரவிந்த் ஸுப்ரமண்யம்

* சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ - தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

*கா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா,  பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

*தி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள். இவற்றுள் அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

* கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.

* பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தந்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர். தகழி, த்ருப்ரயார் ராம க்ஷேத்ரம் முதலான பல தலங் களில் இவர் காட்சி தருகிறார்.

* ம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

* ர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick