திருமகளாய் அருளும் திருமால்! - ஒளஷதகிரி அற்புதம்! | Appur Nithya Kalyana Perumal Temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/09/2017)

திருமகளாய் அருளும் திருமால்! - ஒளஷதகிரி அற்புதம்!

மு.ஹரி காமராஜ், படங்கள்: சி.ரவிக்குமார்

ல்யாண வரம் அருளும் பெருமாளின் திருத் தலங்களில் ஒன்று ஔஷதகிரி. சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ளது சிங்க பெருமாள்கோவில். இங்கிருந்து ஒரகடம் செல்லும்  வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில், ஆப்பூர்  எனும் கிராமத்தின் வலப்புறம் அமைந்திருக்கிறது ஒளஷதகிரி எனும் குன்று. இதன்மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

பொதுவாக பெருமாளின் திருமார்பில் திருமகளும் தாயாரும் இருப்பதை நாம் பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால், ஒளஷதகிரி கோயிலில் அருளும் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னவேங்கடேச பெருமாளே  திருமகளாக தரிசனம் தருவதாக ஐதீகம். அதன் காரணமாகவே இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டி வருபவர்கள் பெருமாளுக்குப் புடவை சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.