‘எங்கள் வீடே கோயிலானது!’ | Koppanapatti Shirdi Saibaba temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/09/2017)

‘எங்கள் வீடே கோயிலானது!’

பிரேமா நாராயணன், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

சைக்க முடியாத நம்பிக்கையுடன்  ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் பாதங்களில் தனது துன்பங்களைச் சமர்ப்பித்துத் தொழுபவனின் உள்ளத்தில் பாபா குடிகொள்கிறார் என்பது ஒவ்வொரு சாயி பக்தரும் அனுபவித்து உணரும் உண்மை. அதற்கும் மேலே போய், தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பாபாவையே நினைத்து, ஒவ்வொரு செயலையும் அவருக்கே அர்ப்பணித்து வாழும் பக்தர்கள் வாழ்வில் அவர் நிகழ்த்தும் அருளாடல்கள் மகத்தானவை. 

இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, புதுக் கோட்டை மாவட்டம்  பொன்னமராவதிக்கு அருகிலுள்ள கொப்பனாபட்டி என்ற சிறு கிராமத் தில் அமைந்திருக்கும் ஸ்ரீஷீர்டி சாயிபாபா ஆலயம்.