ஸ்ரீசாயி சரணம்! - சிலிர்க்க வைக்கும் அற்புதத் தொகுப்பு

தொகுப்பு: க.புவனேஸ்வரி, இ.லோகேஷ்வரி

து 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள் எவருடனும் பேசாமல் யோகநிலையில் இருந்த அந்த இளைஞனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் துடிப்பும் அந்தக் கிராமத்தவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், ஒருநாள் அவ்வூரிலிருந்த கண்டோபா கோயில் பக்தர் ஒருவருக்கு இறையருள் வந்தது. அவர் மூலம் இறைவாக்காக வேப்பமரத்தின் அருகில் குறிப்பிட்டதோர் இடத்தில் இருந்த சுரங்க அறை கண்டுகொள்ளப்பட்டது; ‘அங்குதான் அந்த இளைஞன் 12 ஆண்டுகளாக பயிற்சி செய்தான்’ என்ற தகவலும் எடுத்துச் சொல்லப்பட்டது. அது தன் குருநாதர் சமாதியான இடம். புனிதமான அந்த இடத்தைப் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று இளைஞன் கூற, அதை ஏற்றுக்கொண்டு கிராமத்து மக்களும் அந்த இடத்தை மனதார வணங்கினார்கள். அதன் பிறகு அங்கிருந்து அந்த இளைஞன் காணாமல் போனான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick