கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகுடேசுவரன்

மலாபுரத்தில் நான்குவழிச் சாலைகள் சேர்கின்றன. ஹோஸ்பேட்டையிலிருந்து கமலாபுரத்துக்கு வரும் சாலை அங்குள்ள பேருந்து நிலையத்தைத் தொடுகிறது. அவ்விடத்திலிருந்து நேராகச் செல்லும் வழி ஹம்பியின் கல்லடுக்குக் குன்றங்களுக்குள் புகுந்து போகும் உள்ளூர்ச் சாலையாகிறது. இடப்புறம் திரும்பும் சாலையில் துங்கபத்திரை நதிக்கரைக்குச் செல்லலாம்.ஹம்பிக்குச் சுற்றுலா வருகின்ற ஆயிரக் கணக்கானவர்கள் அந்தச் சாலையில்தான் நெரிசலை உருவாக்குமாறு செல்கின்றார்கள்.

இடப்புறமாய்த் திரும்புவதற்குப் பதிலாக வலப்புறமாய்த் திரும்பினால் பெல்லாரி செல்லும் சாலையைச் சென்றடையலாம். ஹோஸ்பேட்டைக்கும் பெல்லாரிக்கும் இடையிலுள்ள சாலைதான் தென்னிந்தியாவின் நட்டநடுச் சாலை. ஆந்திரத்திலிருந்து மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை அடைவதற்குப் பெல்லாரி, ஹோஸ்பேட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும். போக்குவரத்து அருமை மிக்க அச்சாலையில் பாரவுந்துகளைத்தான் பார்க்க முடியும். அவ்வாறு செல்லும் ஓரிரு வண்டிகளைத் தவிர்த்து வேறு வண்டிகளே இல்லாமல் அச்சாலை வெறிச்சோடியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick