ஆலயம் தேடுவோம் - 'இது கனவில் கிடைத்த கட்டளை!’

எஸ்.கண்ணன்கோபாலன், படங்கள்: ச.வெங்கடேசன்

‘சான்றோருடைத்து’ என்று சிறப்பித்துச் சொல்லப் படும் தொண்டைமண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற பல சிவாலயங்கள் ஏற்படுத்தப் பட்டு, நித்திய பூஜைகள் நடப்பதற்கான மானியங்களும் வழங்கப்பட்டன. அத்தகைய ஆலயங்களில் ஒன்றுதான், மங்கலம் அருள்மிகு காமாட்சி அம்பிகை சமேத அருள்மிகு  திருப்பாலீஸ்வரர் திருக்கோயில்.

மகேந்திரவர்ம பல்லவ மன்னரால் ஏற்படுத்தப்பட்ட மகேந்திரவாடி ஏரிக்கரையில் வயல்கள் சூழ அமைந் திருக்கிறது மங்கலம் கிராமம். இவ்வூரின் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஞானமலை முருகன் திருக்கோயிலும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஒருகாலத்தில் நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் விமர்சையாக நடைபெற்று வந்த திருப்பாலீஸ்வரர் கோயில், பல்லவர்களின் பிரதிநிதியாக வட ஆற்காடு பகுதியை நிர்வாகம் செய்து வந்தவர்களால் கட்டப் பட்டதாகவும், பிற்காலத்தில் அந்நியர்கள் படையெடுப் பால் ஆலயம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, கோயில் மண்மேடிட்டுப் போனதாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick