ஆஹா... ஆன்மிகம்! - அக்ஷரம் | Spiritual titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆஹா... ஆன்மிகம்! - அக்ஷரம்

அருண வசந்தன்

ழுத்துகளை அக்ஷரம் என்பர்; அழிவில்லாதது என்று பொருள் சொல்வர். சைவ சித்தாந்தங்கள் எழுத்துகளை ‘வன்னங்கள்’ என்கின்றன. உலகப் படைப்புக்கு மூலமாக வழங்கும் ஆறு அத்துவாக்களில் வன்னமும் ஒன்று.

ஞ்சாட்சரம் என வழங்கும் `நமசிவாய' எனும் ஐந்தெழுத்துகளும் சிவனாரின் நடராஜ திருமேனியாக விளங்குவதாகக் கூறுவர். அதேபோல் ‘ங’ என்ற எழுத்தைக் காளையின் உருவமாகக் கொள்வர்.
அப்பர் சுவாமிகள் ‘ஙகரவெல்கொடியாய்’ என்று சிவபெருமானைத் துதிக்கிறார்.

காளிங்க நாகம் ‘ல’ போன்று வளைந்து நெளிந்திருக்க, அதன் மீது கண்ணன் நாட்டியமாடினான் என்று சித்திரிக்கிறார் பாம்பன் சுவாமிகள். ‘ய’ எனும் எழுத்து சூலம்போல் உள்ளது என்பதை ‘யகரமேபோல் சூலம் ஏந்தும் நறும்புயன்’ என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick