கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

பூசை.ச.ஆட்சிலிங்கம்

பிருங்கி முனிவர் சிறந்த சிவபக்தர். ஒருமுறை கயிலைக்குச் சென்றவர், அங்கே அமர்ந்திருந்த சிவசக்தியரில் சிவனாரை மட்டுமே வலம் வந்து வணங்கினார். இதைக் கண்ணுற்ற அம்பிகை ஆற்றாமை கொண்டாள். விளைவு... பிருங்கி முனிவரின் சக்தியும் ஆற்றலும் அவரைவிட்டு நீங்கின. அப்போது, சிவப் பரம்பொருள் அவருக்கு மூன்றாவது காலை அளித்துச் சாயாது நிற்கவைத்தார்.

இதையடுத்து திருக்கயிலையை விட்டு நீங்கிய அம்பிகை, கெளதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அவரின் வழிகாட்டலுடன் கேதாரத்தை அடைந்து 21 நாள்கள் விரதமிருந்து சிவனாரை வழிபட்டு, அவரின் திருமேனியில் இட பாகத்தைப் பெற்றாள். பெளஷ்யபுராணம், திருச்செங்கோடு தலபுராணம், அருணாசலப்புராணம் ஆகியன இந்தக் கதை குறித்து விவரிக்கின்றன.

இக்கதை மட்டுமின்றி, அம்பிகை சிவனாரை வழிபட்டு, பொன்னிறம் பெற்றாள் என்றும் அதனால் அவளுக்குக் `கெளரி' எனும் திருப்பெயர் வந்தது என்றும் ஒரு திருக்கதை உண்டு. இவ்வாறு அம்பிகை கடைப்பிடித்த விரதமே கேதார கெளரீஸ்வர விரதம் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick