சக்தியர் சங்கமம்!

ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்!

க்தி விகடன்  12.9.17 தேதியிட்ட சக்தியர் சங்கமம் பகுதியில்  சேலம் வாசகி ஹரிப்ரியா, ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

மிக அற்புதமான அந்த ஸ்தோத்திரப் பாடல் தொகுப்பின் நகலை சென்னை வாசகர் ராம்மோஹன், மதுரை வாசகி வி.லக்ஷ்மி ஆகியோர் அனுப்பிவைத்துள்ளனர். அவை, வாசகி ஹரிப்ரியாவுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன. சகல கிரக தோஷங்களையும் நீக்கி, சர்வ சுபிட்சங்களை அளிக்கவல்ல ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரத்தின் ஒரு பாடல் இங்கே உங்களுக்காக...

ஸ்ரீஸேஷ ஸைலசுநிகேதன திவ்ய மூர்த்தே
நாராயணாச்யுத ஹரே நளிநாயதாக்ஷ
லீலாகடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்


கருத்து: சேஷகிரியில் வசிப்பவரும், திவ்ய உருவம்கொண்டவரும், நாராயணனும், அச்சுதனும், ஹரியும், புண்டரீகாக்ஷனும், வேடிக்கையான கடாக்ஷங்களால் எல்லா உலகங்களையும் ரட்சிப்பவருமான திருவேங்கடவனே... என்னைக் கைகொடுத்து காக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick