குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

கே.குணசீலன்

தீபாவளி என்றாலே லக்ஷ்மிகுபேர பூஜை செய்வது வழக்கம். பொதுவாக அவரவர் வீடுகளிலோ அல்லது வியாபார ஸ்தலங்களிலோ லக்ஷ்மிகுபேர பூஜை செய்வார்கள். ஆனால், தஞ்சாவூரில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தீபாவளியை ஒட்டிவரும் அமாவாசை நாளில் லக்ஷ்மிகுபேர பூஜை நடைபெறுகிறது.

அன்று கோயிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு தஞ்சபுரீஸ்வரரை வழிபட்டால், இழந்த செல்வங்களைத் திரும்பப்பெறலாம். வறுமையில் இருப்பவர்கள், குபேரன் அருளால் நிறைந்த செல்வம் பெற்றுச் சிறப்புற வாழலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick