கண் நிறைந்த பெருமாள்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள ஊர் மலையடிப்பட்டி. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீகண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேக - ஆராதனைகள் செய்து வழிபட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்; திருஷ்டி தோஷங்கள் விலகும்.

கோயிலுக்கு எதிரில் சக்திவாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள்படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

தல விருட்சமான அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு இங்குள்ள சக்தி தீர்த்தத் திலிருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமிகடாட்சம் பெருகும்; திருமணத் தடை நீங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick