சீரும் சிறப்புமாய் ஸ்ரீவாரி சேவை... | Srivari Seva - Voluntary Service to Sri Venkateswara Swamy - Sakthi Vikatan | சக்தி விகடன்

சீரும் சிறப்புமாய் ஸ்ரீவாரி சேவை...

பிரேமா நாராயணன், படங்கள் : RSP Network

இது பக்தர்களுக்கான பணிவிடை

திருப்பதி திருமலைக்குச் செல்பவர்கள் அங்கே ஆரஞ்சு வண்ணச் சீருடையில் பெண்களும், வெள்ளை நிறச் சீருடையில் ஆண்களும் கழுத்தில் ஆரஞ்சு வண்ண ஸ்கார்ஃபுடன் ஆங்காங்கே தன்னார்வப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். திருமலை முழுவதும் பக்தர்களின் காத்திருப்புக் கூடமாகட்டும், அன்னதானக் கூடமாகட்டும் அல்லது லட்டு பிரசாதம் வழங்கும் இடமாகட்டும்... எல்லா இடங்களிலும் இந்தத் தொண்டர்கள் நீக்கமற நிறைந்திருப்பார்கள். இந்தத் தன்னார்வலர்கள் செய்யும் தொண்டுக்கு, ‘ஸ்ரீவாரி சேவா’ என்று பெயர். 16 ஆண்டுகளுக்கு முன் இந்த சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 15 வருடங்களாக திருப்பதி ஸ்ரீவாரி சேவைக்குத் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, குழுக்களாக அழைத்துச்சென்று வருபவர் சேலத்தைச் சேர்ந்த மகாலிங்கம். இதுவரை 178 குழுக்களை சேவைக்காகத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றிருக்கும் இவர், ஸ்ரீவாரி சேவை குறித்த தகவல்களையும் தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick