வழிகாட்டிய பதிகம்... வரம் தந்த சிவனார்!

மு.ஆதவன், படங்கள்: தே.சிலம்பரசன்

சைவ சமய சந்தானக் குரவர்களில் முதன்மையானவர் மெய்கண்டார். சிவனருளால் கடலூர் மாவட்டம், பெண்ணா கடத்தில் (பெண்ணாடம்)அவதரித்தவர் இவர். சைவ சித்தாந்தக் கருத்துகளை 12 சூத்திரங்களில் சொல்லும் ‘சிவஞான போதம்’ என்னும் நூலை இயற்றினார்.

இவருடைய நூலைப் பின்பற்றியே அருணந்தி சிவாச் சாரியார் ‘சிவஞான சித்தியார்’ எனும் வழி நூலையும், உமாபதி சிவாச்சாரியார் ‘சிவப்பிரகாசம்’ என்னும் சார்பு நூலையும் இயற்றினர்.

பதிகத்தால் கிடைத்த வரம்!

பெண்ணாகடத்தில் சிவ பக்தியில் சிறந்து திகழ்ந்த தம்பதியர் அச்சுதக்களப்பார் - மங்களாம்பிகை. இவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஆதலால், தங்கள் குருநாதர் சதாசிவாச் சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர்.

குருநாதர், சிவனாரையும் அவருக்குப் பிரியமான திருமுறைகளையும் பூஜித்தார். அச்சுதக்களப்பாரிடம் ஒரு கயிற்றைக் கொடுத்து, திருமுறை ஏட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் வைக்கும்படிக் கூறினார். அந்தப் பக்கத்தில் திருஞானசம்பந்தர் திருவெண் காட்டில் அருளிய ‘பேயடையா பிரிவெய்தும்’ என்னும் பாசுரம் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick