சகலமும் சாயி! - ‘அந்த பிரசாதத்தை எடுக்காதே’

எஸ்.கிருஷ்ண மூர்த்தி

நான் `ஷீர்டி சன்ஸ்தான் டிரஸ்ட்'டின் பெங்களூரு மையத்தில் சேவை செய்து வருகிறேன். ஸ்ரீசாயியின் திருவருளால் எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பெங்களூரிலிருந்து ஷீர்டிக்குச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையான முன்பதிவு போன்ற வசதிகளை ஏற்பாடு செய்து தருவது என்னுடைய பணி. அப்படி நான் ஏற்பாடுகள் செய்துகொடுத்து, ஷீர்டிக்குச் சென்று வருபவர்களில் பலரும் என்னை வந்து பார்த்து நன்றி சொல்லிவிட்டு, ஷீர்டி பிரசாதத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை மையத்தில் இருக்கும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, நானும் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக்கொள்வேன்.

ஒரு வியாழக்கிழமையன்று இரவு சுமார் 7 மணிக்கு அன்பர் ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார். அவர் என்னிடம், ‘`பாபா அருளா லும் உங்களுடைய உதவியாலும் ஷீர்டி யாத்திரை நல்லபடி முடிந்தது. மனம் குளிர பாபாவைப் பலமுறை தரிசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. உங்களுக்கு ஷீர்டியில் இருந்து பிரசாதம் கொண்டுவந்திருக்கிறேன்'’ என்று சொல்லி, உதி மற்றும் இனிப்புகள் அடங்கிய ஒரு பொட்டலத்தை என் கையில் கொடுத்துச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick