ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்! | ManalurPet Kakaneswarar temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: கா.முரளி

யிலை மலைச் சாரலில் ஒருநாள் இரண்டு அன்னபட்சிகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றை தன் அருள் கண்களால் சிவனார் பார்க்க, அவருடைய பார்வையிலிருந்து 21 சிவ கலைகள் புறப்பட்டு, காக உருவத்துடன் அன்னபட்சிக்குள் பிரவேசித்தன. அதன் பயனாக அன்னம் இருபது முட்டைகளைப் பொரித்தது.

21-வதாக வெளிவந்தவர் காக வடிவத்தில் இருந்த காகபுஜுண்டர். அண்டசராசரங்களையும் ஆட்சிசெய்யும் சிவனார், தம் அம்சமாகத் தம்மால் படைக்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்கள்,  மகரிஷிகள் ஆகியோருக்கு மூன்று காலங்களையும் உணர்த்தும் பொறுப்பை, தம் திருவருளால் அவதரித்த காகபுஜுண்டருக்கு அருளியதுடன் அவருக்கு சிரஞ்ஜீவியாக இருக்கும் வரமும் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick