ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்... | Vedaranyam Thiru Marai Kadar - Spiritual informations - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

வி.ஜெ.செல்வராஜு, ஓவியம்: ஸ்யாம்

றியாமை எனும் இருளை நீக்கி,  நமது வாழ்வில் மெய்ஞ்ஞான ஒளியேற்றும் திருநாள் தீபாவளி. தீபங்களால் சிறப்புபெற்ற இத்திருநாளையொட்டி, விளக்குகளால் சிறப்புபெற்ற ஒரு தலத்தில் நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்வைப் படித்தறிவோமா?

`வேதாரண்யம் விளக்கழகு' என்பது வழக்குமொழி. இந்தத் தலத்தில்தான் நம் மெய்ஞ்ஞானத்தைத் தூண்டும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வேதங்களே ஆரண்யமாக இருந்து தவமியற்றிய காரணத்தினால், வேதாரண்யம் என்று பெயர்பெற்ற இந்தத் தலம், அழகு தமிழில் திருமறைக்காடு என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே, அன்னை யாழைப் பழித்த மொழியம்மை துணையுடன் எழுந்தருளியிருக்கிறார் மறைக்காட்டு மணாளர்.

மிகப் பழைமையான திருமறைக்காடு தலத்தை தரிசிக்க, உழவாரப் பணியால் உயர்வுபெற்ற அப்பர் சுவாமிகளும், தெய்வக் குழந்தையான  திருஞான சம்பந்த சுவாமிகளும் விஜயம் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick