ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களே!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் ஆட்சிப்பெற்று இருப்பதால் தைரியம் கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால் வீண் பழி விலகும்.  பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குப் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

ஆனால், செவ்வாய் 5-ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் கற்பனைத்திறன் வளரும்.

எதையும் சாதிக்கத் துடிக்கும் நேரம் இது.


தோல்வி கண்டும் துவளாதவர்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick