சனங்களின் சாமிகள் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

முத்துப்பட்டன் கதை

வெகு தூரம் வெயிலில் நடந்து வந்த களைப்பு... முத்துப்பட்டனின் கால்கள் ஓய்வுவேண்டி நடை வேகத்தைக் குறைத்தன. அதுவும் சீரான பாதை என ஒன்று இல்லாத காட்டுக்குள் கொடிகளை விலக்கி, செடிகளைத் தாண்டி, முட்களைத் தவிர்த்து, கற்கள் இடராமல் நடப்பது கடினமான காரியம். முத்துப்பட்டன் உண்மையில் சோர்ந்துதான் போயிருந்தான். காட்டுக்கு நடுவே ஒரு கறுத்த பாறையைப் பார்த்தான். பாறைக்கு நிழற்குடை பிடிப்பதுபோல அருகிலேயே ஒரு பெரிய ஆலமரம். இதமான காற்று ஆலமரத்தின் இலைகளை வருடி, அசைத்துவிட்டுச் சென்றது. அந்தச் சூழலில், காட்டுக்குள் அவனுடைய அயர்ச்சியைப் போக்கும் மஞ்சமாகத் தெரிந்தது அந்தப் பாறை. பிறகு, முத்துப்பட்டன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. தன் துண்டை விரித்தான். மல்லாந்து படுத்தான். கண்களை மூடினான். சட்டென்று தூங்கிப் போனான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick