வாமனர் அளந்த மூன்றாவது அடி... | Mythological Story : Vamana Avatar - Sakthi Vikatan | சக்தி விகடன்

வாமனர் அளந்த மூன்றாவது அடி...

ப.கிருஷ்ணசாமி

ஸ்ரீமந்நாராயணன் தர்மத்தை நிலைநிறுத்த எடுத்த அவதாரங்களில், ஆவணி மாதம் சுக்கிலபட்சம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு யாசித்த வாமனாவதாரமும் ஒன்று.

ஆனால், வாமனன் கேட்டபடி மகாபலியினால் மூன்றடி நிலம் தர முடிந்ததா என்றால், இல்லையென்றே கூறலாம். அப்படியானால் வாமனனாக வந்த   பகவான்  மூன்றடி அளக்கவில்லையா என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை காணும் முன்பாக, பகவானின் வாமனாவ தாரம் தோன்றியதன் பின்னணியைப் பார்ப்போம்.

பிரகலாதனின் பேரன்தான் இந்திரசேனன் என்ற மகாபலிச் சக்கரவர்த்தி, அவன் மிக்க வலிமை பெற்றிருந்ததால் மாவலி என்ற பெயரும் பெற்றான். இவனும் இவனைச் சேர்ந்த அசுரர்களும், அமிர்தம் பெறுவதில் தேவர்களுக்கு உதவி செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick