நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

வாசகர்களின் நலனுக்காக திருவிளக்கு பூஜை, சுவாஸினி பூஜை, பரிஹார சிறப்பு வழிபாடுகள் என்று `சக்தி விகடன்' சார்பில் பல வைபவங்கள் நடந்துவருவதை அறிவீர்கள்.

அவ்வகையில் குருப்பெயர்ச்சி தினமான கடந்த செப்டம்பர் 2 சனிக்கிழமையன்று, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள முன்னூரில், சக்தி விகடனும் அருள்மிகு ப்ரஹன்நாயகி சமேத அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆன்மிக சங்கமும் இணைந்து வழங்கிய குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம் மற்றும் வழிபாடுகள் மிக அற்புதமாக நடந்தேறின.

‘முன்னூருக்குச் சென்றுவந்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வந்துவிடலாம்’ எனும் நம்பிக்கையைப் பக்தர்கள் மனதில் ஆழப் பதித்துவிடும் அற்புதமான க்ஷேத்திரம் இது. தன் பக்தனான நல்லியகோடன் போரில் வெற்றி பெறும் பொருட்டு, தாமரை மலர்களையே ஆயுதங்களாக அருளி, அவனை வெற்றி வாகை சூடச் செய்த முருகப் பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் திருத்தலம், தன் அடியவரான சோழ மன்னனுக்காகத் தமது திருநடன தரிசனத்தைக் காட்டியருளியதால் சிவனார் ஆடவல்லீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு திகழும் ஊர். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் தான் இழந்த ஞானத்தையும் தேஜஸையும் திரும்பப் பெற்ற உன்னத திருத்தலம். மட்டுமின்றி சிவப்பரம்பொருளே குரு அம்சத்துடன் அருள்பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரம் முன்னூர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick