ராஜ யோகம் அருளும் துதிப்பாடல்!

நல்லன எல்லாம் தருவாள்

ன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு.

செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று
    முடிபுனைந்து செங்கோலோச்சி
முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு
    நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்
    தன்மகுடம் சூட்டிச் செல்வந்த்
தழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி
    அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்


கருத்து: அன்னை பராசக்தி பாண்டியர் குலத்தில் திருமகளாகத் தோன்றி தடாதகை என்று பெயர்கொண்டு வளர்ந்தாள். வேதாகமம் தொடங்கி போர் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பயின்று பாண்டியநாட்டுப் பேரரசியாக மணிமகுடம் புனைந்து செங்கோல் நடத்தினாள். உலகத்திலுள்ள அரசர்களை வெற்றிகொண்டு அவர்களிடம் கப்பம் வசூலித்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick