ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செப்டம்பர் 12 முதல் 25 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! உங்களுடைய ராசியை குரு பகவான் பார்ப்பதால் அஷ்டமத்துச் சனியின் பாதிப்பு ஓரளவு குறையும். மன நிம்மதி உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணம் வரும் என்றாலும் பற்றாக் குறையும் நீடிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப் படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக்கூடும்.

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்தில் அமர்வதால் அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  பூர்வீகச் சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும்.  கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். கலைத்துறையினரே! உங்களது படைப்புகளுக்குப் பாராட்டுகள் குவியும்!

எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

இலக்கை எட்டும் வரை ஓயாமல் போராடுபவர்களே! புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனைகளில் மாற்றம் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.

அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்கள் லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் வலியவந்து உதவுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களின் விருப்பங்களைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். அவர்களது புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள்.

3-ம் இடத்தில் ராகு பகவான் நிற்பதால் வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை உங்களது புதிய யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! நீங்கள் எதிர் பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick