ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மார்ச் 27 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

ரா
சிக்குள் சுக்கிரன் நுழைந்திருப்பதால் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறக்கும். திடீர் யோகமும் எதிர்பாராத பணவரவும் உண்டு. உங்களது ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். வாகனப் பழுதுகள் நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. ஆபரணங்கள் சேர்க்கையுண்டு. புதன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவார்கள்.

மனதுக்கு இதமான செய்திகள் வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குரு சாதகமாக இல்லாததால், எவரையும் எதற்காகவும் பரிந்துரை செய்யவேண்டாம். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். கலைத் துறையினர், தங்களுடைய திறமை களை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கும்.

திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் காலம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பு
தனும், சூரியனும் 11-ம் வீட்டில் நிற்பதால், சுபநிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உங்கள்மீது வருத்தத்தில் இருந்த பெற்றோர், இனி உங்களைப் புரிந்துகொள்வார்கள். சிலருக்கு, புதிய நட்பு வாய்க்கும்; அதனால் ஆதாயமும் உண்டு. ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பயணங்கள் சிறப்பாக அமையும். அஷ்டமத்துச்சனி தொடர்வதால், அவ்வப்போது வீண் பிரச்னைகள் தலைதூக்கக்கூடும். ஆகவே, அடுத்தவர்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். சுக்கிரன் 12-ம் வீட்டில் நுழைந்திருப் பதால், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளாதீர்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். வியாபாரத்தில், எதிர்பார்த்தபடி பற்று-வரவு உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களது ஆலோசனைக்கு மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick