ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏப்ரல் 10 முதல் 23 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

உதவிகள் கிடைக்கும்


14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி வந்து செல்லும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்துப் பிரச்னை தீரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. கல்யாண பேச்சு கூடி வரும். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு வலுவாக அமர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். மகனுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத் தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். கலைத் துறையினர்களே! எதிர்பார்த்த புது வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

விவேகமான முடிவுகளால் வெற்றி பெறும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பணவரவு அதிகரிக்கும்


13-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் தூக்க மின்மை, டென்ஷன், வந்துப் போகும். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். புதனும், ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.  

உறவினர்கள், நண்பர்களின் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு 6-ல் மறைவதால் கவலைகள், வீண் பயம் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் வரும். உழைப் பிற்கேற்ற பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

விஸ்வரூபமெடுக்கும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick