சிவமகுடம் - பாகம் 2 - 8 | Sivamagudam Second Series - Sakthi Vikatan | சக்தி விகடன்

சிவமகுடம் - பாகம் 2 - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

திவேகத்துடன் சுழற்றியடித்தது காற்று. வனச் சமவெளியிலிருந்து புறப்பட்ட போது இளந்தென்றலாக வீசத் துவங்கியது, இப்படியொரு பெருங்காற்றாகப் பரிணமித்தது எப்போது என்பதை இளங்குமரனால் திட்டமாக அனுமானிக்க இயலவில்லை. புறப்பட்ட இடத்திலிருந்து இப்போது அவன் வந்தடைந்திருக்கும் இந்த மலைச்சரிவு வரையிலுமான பயணம் குறுகியதுதான். எனினும், பயணத் தின்போது ஆழ்ந்த சிந்தனைக்கு அவன் ஆட்பட்டிருந்தபடியால், வெளிச்சூழலை அவன் மனம் அவதானிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick