சித்திரை... அவல் பிரசாதம்!

சித்திரை மாதம் பிறக்கப் போகிறதென்றால், வேப்ப மரங்கள் எல்லாம் இளம்பச்சை நிறத்தில் பூவாடை கட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். சித்திரைப் பிறந்துவிட்டாலோ தரையெல்லாம் வேப்பம்பூ மணக்கும். இந்தப் பூக்களை, கிளி மூக்கு மாங்காய், ‘வாசத்தில் உன்னைவிட நான் தான் உசத்தி’ என்று வம்பிழுக்கும். துளி கறுப்பில்லாத புத்தம்புது புளிக்கும் இதுதான் சீசன். அதனால்தான், தமிழ் வருடப் பிறப்பன்று செய்கிற  பச்சடியில்  இந்த மூன்றையும் கட்டாயம் சேர்ப்பார்கள். இந்த மூன்றுடன் புத்தம்புது அவலுக்கும் இதுதான் சீசன். ஜனவரியில், நெல் அறுவடை செய்தவர்கள், விற்பதற்கு, உணவிற்கு, விதைப்பதற்கு என்று பிரித்த எடுத்த பிறகு, மிச்சமிருப்பதைப் புழுங்க வைத்து, புழுங்கியதை வறுத்து, சூடு அடங்குவதற்குள் அவலாக இடித்து வைப்பார்கள். அதனால், சித்திரையை வரவேற்க அவலில் செய்த பலகாரங்களும் வரிசைக் கட்டி நிற்கும். அதில் 10 பலகாரங்களை இங்கே நமக்காகச் செய்து காட்டுகிறார் சமையற்கலை நிபுணர் லஷ்மி சீனிவாசன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick