‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

பிரேமா நாராயணன்

காசிக்குச் சென்றால் புண்ணியம்; கங்கையில் நீராடினால் இன்னும் புண்ணியம். காசி விஸ்வநாதரை தரிசித்தால் கோடானுகோடி புண்ணியம்! அதே விஸ்வநாதர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் கிடைத்தால், அது எத்தகைய புண்ணியம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அத்தகைய பெரும்பாக்கியத்தைப் பெற்றிருப்பவர் ஒரு தமிழர்; சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சுப்புசுந்தரம்.

வாரணாசியில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்கு, 238 ஆண்டுகள் கழித்து, கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி வெகு சிறப்பாக நடந்தேறியிருக்கிறது மகாகும்பாபிஷேகம். இந்த வைபவம் குறித்து மெய்சிலிர்க்க விவரிக்கிறார் சுப்புசுந்தரம்.

‘‘எங்கள் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி. நானும் என் மனைவி அன்னபூரணியும் அடிக்கடி காசிக்குச் செல்வோம். அப்படி ஒருமுறை காசிக்குப் போயிருந்தபோது, அன்னபூரணி கோயில் கதவுக்கு வெள்ளிக் கவசம் செய்து கொடுக்கும் வாய்ப்பு முதலில் எனக்குக் கிடைத்து, பிறகு கைநழுவிவிட்டது. அந்த வருத்தமும் உறுத்தலும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

அதன் பிறகு, ஒருமுறை காசிக்குச் சென்றிருந்தபோது, ஸ்ரீவிஸ்வநாதரை தரிசித்துவிட்டு, அவரை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது, அறிமுகம் இல்லாத ஒருவர் என்னை அழைத்தார். இந்தி மொழியில் ஏதோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னேன். உடனே என்னை கோயில் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றவர், மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன்  உரையாடினார். அதன்பிறகுதான் தெரிந்தது, என்னை அழைத்த நபர்தான் அந்தக் கோயிலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்று. அவர் என்னிடம், `விஸ்வநாதர் சந்நிதியின் வடக்கு நுழைவாயிலுக்கு வெள்ளிக் கவசம் செய்து தருகிறீர்களா?’ என்று கேட்டார். ஒரு நொடி, எனக்கு மேனி சிலிர்த்துவிட்டது. என்னே அவன் சித்தம்! என்னே அவன் திருவிளையாடல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick