கடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்! | History of Karkadeswarar Temple, Tirundudevankudi - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/07/2018)

கடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: இ.ராஜவிபீஷிகா

டி மாதத்தைக் `கடக மாதம்' என்பார்கள். கடகம் என்றால் நண்டு. ஆக, கடக மாதத்தில் கடகம் வழிபட்ட ஒரு திருக்கோயிலைத் தரிசிப் போமா? கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலை விலுள்ளது திருவிசநல்லூர் ரிஷபக் கோயில்.

அங்கிருந்து சுமார் 2 கி.மீ.தொலைவிலுள்ளது திருந்துதேவன்குடி. இங்கு, மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகற்கடேஸ்வரர். இந்தக் கோயில் குறித்த புராணக் கதைகள் சிலிர்க்க வைப்பவை.

அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்

முற்காலத்தில் ஈசனின் சாபத்தின் காரணமாக நண்டாக மாறிய அம்பிகை, இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close