‘கிருஷ்ண’ பதார்த்தங்கள்!

சு.சூர்யா கோமதி - படங்கள்: தே.அசோக் குமார்.

செப்டம்பர் 2-ம் தேதி கிருஷ்ண ஜயந்தி.

அன்றைய தினம் கிருஷ்ணருக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்து அவரை நம் வீட்டுக்கு அழைத்து வழிபடுவது மரபு.

அவ்வகையில் கண்ணனுக்குப் பிடித்த சுவையான பதார்த்தங்களை எப்படிச் செய்ய லாம் என்று வழிகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் தீபா பாலச்சந்தர்.

முன்னதாக சிறு குறிப்பொன்று...

அரிசி மாவைப் பயன்படுத்தி பல பதார்த் தங்களைச் செய்யவுள்ளதால், முதலில் அரிசி மாவை எப்படித் தயாரிக்கலாம் என்பது  குறித்த விவரம் உங்களுக்காக.

பச்சரிசியை அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு களைந்து நிழலில் காய வைத்து மெஷினில் கொடுத்து மையாக அரைத்துக்கொள்ளவும். மாவு சற்று ஆறியதும் வெறும் வாணலியில் மாவினைச் சேர்த்து லேசாக வறுத்து பிறகு சலித்துப் பயன்படுத்த வேண்டும். உளுந்து மாவுக்கு... வாணலியில் உளுந்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து, ஆறியதும் மையாக அரைத்துச் சலித்து பயன்படுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick