சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்களால் பெருமை பெற்ற மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த இடம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவிலுள்ளது ஆழ்வார்குறிச்சி. இவ்வூரில் அண்ணாசிலை அருகில் இடப் புறமாகப் பிரியும் சாலையில் சுமார் 13 கி.மீ. தூரம் பயணித்தால், கடனாநதி அணையை அடைய லாம். இங்கிருந்து சிறிது தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அத்ரி தபோவனம்.

இறையருள் நிறைந்த இந்தத் தலத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும், நமது கிரக தோஷங்கள் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

மேற்குமலைத் தொடரில் மிக அற்புதமான க்ஷேத்திரங்கள் பல அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பொதிகை. தென்கயிலை எனப் போற்றப் படும் பொதிகையில், அகத்தியர் தங்கியிருந்து தமிழ் வளர்த்ததாகச் சொல்வார்கள். இன்றும் அவர் பொதிகையில் வசிப்பதாக நம்பிக்கை உண்டு.

அடுத்தது மகேந்திரகிரி. இந்த மலைப்பகுதியில் முருகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் திருப்பாதத் தடங்களை தரிசிக்க லாம். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் பக்தர்கள் மகேந்திரகிரிக்குச் சென்று வந்தார்கள். மகேந்திரகிரியில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்ட  பிறகு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick