துர்காதேவி சரணம்!

டி மாதத்தின் நாயகியாகவே அருள்பவள் அம்மன். அதிலும் கண்ணனுக்குத் தங்கையாகத் தோன்றி கம்சனை எச்சரித்த ஸ்ரீவிஷ்ணு துர்கை மிகவும் விசேஷமானவள். இந்தியாவெங்கும், சிற்ப அழகிலும் சாந்நித்தியத்திலும் சிறப்புற்று விளங்கும் துர்காதேவியின் தரிசனத்துக்கு உகந்த தலங்களில் குறிப்பிடத்தக்கது, பட்டீஸ்வரம்.

கோவைக்கு அருகில் சுமார் 8 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது பட்டீஸ்வரம். இங்கு ஸ்ரீபட்டீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் துர்கை ஆனந்த மயமானவள். சங்கு, சக்கரம் தாங்கி நிற்கும் இந்தத் தேவியை துதித்தால் கலங்காத நெஞ்சமும் கனிவான வாழ்க்கையும் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.

ட்டீஸ்வரம் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தால் நந்தியைக் கடந்து பட்டீஸ்வரர் சந்நிதியை அடையலாம். அதற்கு முன்பாக இடது புறம் சந்நிதி கொண்டிருக்கிறாள் ஸ்ரீதுர்கையம்மன். பட்டீஸ்வரத்தைப் பொறுத்தவரை, பட்டீஸ்வரருக்கு என்ன சிறப்பு உண்டோ அந்தச் சிறப்பு இந்தத் துர்கைக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick