கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? உயிருடன் இருக்கும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களில் வாடவிடும் பிள்ளைகள், இறந்த பின் அவர்களுக்குச் சிராத்தம் செய்வது தர்மம் ஆகுமா?

-எஸ்.ரங்கராஜன், சென்னை-44

தவறுதான். ஆனால், அவர்களுக்கும் ஒரு வழி வேண்டுமே. மேலும், சாஸ்திரங்களில் விதிக்கப் பட்ட கர்மாக்களைச் செய்வதிலிருந்து நாம் தவறி விடக்கூடாது.

பெற்றோர் உயிருடன் இருந்தபோது அவர் களை முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்குப் பிராயச்சித்தமாகவும், செய்த தவற்றுக்கு ஒரு பரிகாரமாக இருக்கும் என்பதாலும் கண்டிப்பாக சிராத்தம் செய்யவேண்டும். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தவர்கள், அவர்களுக் குச் சிராத்தம் செய்யவில்லை என்றால், மேலும் அதிக பாவம் சேர்ந்துவிடும். எப்படியிருந்தாலும் ஒவ்வொருவரும் தன் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்வது கண்டிப்பான கடமையாகும்.


? ஸ்வாமி படங்களுக்குச் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் மாலை நேரத்தில் வாடிவிடுகின்றன. வாடிய புஷ்பங் களை உடனே அகற்றிவிடலாமா அல்லது மறுநாள் காலையில் புஷ்பம் சாத்தும்போதுதான் அகற்ற வேண்டுமா?

-ஜி.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி

தினமும் காலையில் நீராடி உடலையும் உள்ளத் தையும் தூய்மை செய்துகொண்ட பிறகே ஸ்வாமிக் குப் புஷ்பங்கள் சாத்தவேண்டும். மாலை வேளை யிலும் மலர்களைச் சாத்தவேண்டும் என்றால், நீராடி நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அணிவிப்பதே சிறந்தது.

ஆக, மாலையில் புதிய புஷ்பங்கள் சமர்ப்பிக்கும் போது பழையவற்றை அகற்றலாம். அப்படி முடியாவிட்டால், மறுநாள் காலையில் அணிவிக் கலாம். அதில் தவறு இல்லை.

தூய்மைதான் முக்கியம். கடவுளுக்குச் சமர்ப்பிக் கப்படும் மலர்கள், நம்முடைய முன்வினைகளைப் போக்கக்கூடியவை. எனவே, எவ்வளவு மலர்கள் வேண்டுமானாலும் ஸ்வாமிக்குச்  சமர்ப்பிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick