கடுக்கண்!

பாலு சத்யா - ஓவியம்: பிள்ளை

ரவு நேரம். அந்தத் துறவி வந்து சேர்ந்த இடம் திருவொற்றியூர். பகலெல்லாம் வெகு தூரம் நடந்து வந்திருந்தார். களைப்பும் உறக்கமும் சேர்ந்துகொள்ள கண்ணில்பட்ட ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறினார். ஜில்லென்றிருந்த கட்டாந்தரையில் படுத்தார். அப்படியே உறங்கிப் போனார். 

நள்ளிரவானது. தெருவின் இருபுறமும் நோட்டமிட்டபடி மெள்ள எட்டுவைத்து ஒருவன் வந்தான். துறவி படுத்திருந்த திண்ணைக்கருகே நின்றான். உச்சி முதல் உள்ளங்கால்வரை அவரைப் பார்த்தான். அவரிடம் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லை. அணிந்திருந்த வேட்டியையும், தலைக்குவைத்துப் படுத்திருந்த மேல் துண்டையும் தவிர உடைகள்கூட ஏதுமில்லை. `இடுப்பில் ஏதாவது வைத்திருப்பாரோ...’ என்று யோசித்தபடி நெருங்கிய அந்த ஆளின் கண்ணில் அது பட்டது... நிலவொளியில், துறவியின் காதில் மின்னிக்கொண்டிருந்த கடுக்கண்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்