ராசிபலன்

நவம்பர் 20 - ம் முதல் டிசம்பர் 3 - ம் வரை

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நவீன மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள்.

உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆனால், சூரியனும், குருவும் 8 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார். கலைத்துறையினர், இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளைக் கொடுப்பது நல்லது.

 எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick