ஹர ஹர சிவமே அருணாசலமே! | Spiritual Story Of Tiruvannamalai Karthigai Deepam - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஹர ஹர சிவமே அருணாசலமே!

படம்: ஸ்மைல்ஸ் வி.பாபு

நினைத்தாலே முக்தி தரும் தலம்
இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்
ஈசன் நெருப்பாக நின்ற தலம்
மலையாகக் குளிந்த தலம்

லிங்கோத்பவர் எழுந்த தலம்
மால் அயனுக்கு அருளிய தலம்
மன்மதனை உயிர்ப்பித்த தலம்
அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்

அர்த்தநாரி உதித்த தலம்
அருணகிரியை ஆட்கொண்ட தலம்
திருவெம்பாவை எழுந்த தலம்
தபோவனர்களின் தாயகத் தலம்

வல்லாளனை வாழ்வித்த தலம்
கணம்புல்லரைக் கவர்ந்த தலம்
இடைக்காடரின் முக்தி தலம்
மகாபலிக்கு அருளிய தலம்

வேதம் முழங்கும் தலம்
விண்ணோர் ஏத்தும் தலம்
புத்தி தரும் தலம் சகல ஸித்தி தரும் தலம்
சக்தி பெருகும் தலம் ஜீவன் முக்தி பெருகும் தலம்
சிவன் நாமம் ஜொலிக்கும் தலம்

அண்ணாமலையே! திருவண்ணாமலையே!
அண்ணாமலையே! எங்கள் அண்ணாமலையே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick