மகேஸ்வரனுக்கு மனமே பூரண கும்பம்! | The Significance of Maha shivratri - Sakthi VIkatan | சக்தி விகடன்

மகேஸ்வரனுக்கு மனமே பூரண கும்பம்!

பி.சந்த்ரமெளலி

`சிவம்’ என்ற சொல்லுக்கு ‘மங்கலம்’ என்பது பொருள். அதன்படி சிவராத்திாி என்பதற்கு, மங்கலங்களை அருளும் இரவு என்பது பொருள். நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மங்கலம் வளா்ந்து நிறைவதற்காக, சிவபெருமானின் மங்கலகரமான நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனைகளைப் படிப்பதும் தியானிப்பதும் சிறப்பு.

அவ்வகையில், முதலில் சுபமுகூா்த்தம் ஒன்றை, அபூா்வமான  கல்யாணம் ஒன்றை தாிசிப்போமா?

ஆதிசங்கரா் திருக்கயிலை சங்கரரை தரிசித்தார். 

“பரம்பொருளே, சகல உலகங்களையும் நீங்கள் சிருஷ்டி செய்கிறீர்கள். சகல உலகங்களிலும் இருக்கும் சகலருக்கும் நெருங்கிய உறவினரான நீங்கள், தூய்மையான ஞானானந்தக் கடலும்கூட. இத்தகு மகிமை வாய்ந்த தாங்கள் அடியேனின் வேண்டுகோளை ஏற்க வேண்டும்’’ என்று கயிலைநாதரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick