‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’ | sri Navanitheeswarar Temple in Karukkupettai - Sakthi Vikatan | சக்தி விகடன்

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

நவாஸ்பேட்டை ஸ்ரீநவநிதீஸ்வரர் ஆலயம்எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: எஸ்.விவேகானந்தன்

‘சான்றோருடைத்து’ எனும் சிறப்புக்குரிய தொண்டை மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்த காஞ்சியை ‘கோயில் நகரம்’ என்று சிறப்பிப்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்குக் கோயில்கள் நிறைந்த நகரம் அது. காஞ்சியில் மட்டுமன்று, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான திருக்கோயில்கள் உண்டு.

ஒரு காலத்தில் மகோன்னதமான நிலையில் திகழ்ந்த அந்த ஆலயங் களில் பலவும் சிதிலமடைய, நித்திய பூஜைகளும் நின்றுபோயின. அதுமட்டுமா? அவற்றில் சில ஆலயங்களில் அருளோச்சிக்கொண்டிருந்த தெய்வ மூர்த்தங்களும் காணாமல்போயின என்பது கவலைக்குரிய செய்தி. காணாமல்தான் போனதோ, களவுதான் போனதோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். அப்படியான ஆலயங்களில் ஒரு சிவாலயத்தைப் பற்றி  வேலுப்பிள்ளை என்ற அன்பர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick