மண்ணுக்கடியில் மகேஸ்வர தரிசனம்! - குகைக்கோயில் அற்புதம் | Gavi Gangadhareshwara Temple in Bengaluru - Sakthi Vikatan | சக்தி விகடன்

மண்ணுக்கடியில் மகேஸ்வர தரிசனம்! - குகைக்கோயில் அற்புதம்

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

‘உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று, மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன், தெற்குப் பார்த்து குரு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை சுமார் 20 நிமிடங்கள் வழிபடும் அற்புதமான குகைக் கோயில் பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கிறது’ என்று சக்தி விகடன் வாசகர் ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, நமக்கு வியப்பாகத்தான் இருந்தது.

‘தெற்குப் பார்த்து அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு, மேற்கில் மறையும் சூரியன், ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரம் சிவபெரு மானை வழிபடுவது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியும் நமக்கு எழவே செய்தது. சூரியன் வழிபடும் கோயில் என்பதால், ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். பெங்களூரு கெம்பெகௌடா பகுதியில் கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கவி கங்காதரேஸ்வரர் கோயில் பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றினாலும், ‘மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது’ என்று சொல்வார் களே,  அதன் உண்மையை நமக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்த அற்புதக் கோயில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick