ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும். பிள்ளை களின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடிவரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.  தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சர்ப்ப கிரகங்களான ராகு, கேது சாதகமாக இல்லாததால்  வீண் அலைச்சல், தர்மசங்கடமான சூழல்கள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலை களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புகழ், கௌரவம் உயரும்.

நினைத்ததை சாதித்துக்காட்டும் தருணம் இது. 


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பண வரவு திருப்தி தரும்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை உங்களது விருப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றியமைப்பீர்கள். இதுவரையிலும் உங்கள் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் இருந்துவந்த கசப்பு உணர்வு நீங்கும். அவர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் வாழ்க்கைத்துணைவர் வழியில் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்; அதனால் பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில், எதிர்பார்த்த அளவுக்குக் கணிசமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும், சமாளிப்பீர்கள்.  தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

திட்டமிட்ட காரியங்கள் வெற்றிபெறும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick