கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 17 | History and Special Darshans of Temples - Hambi - Sakthi Vikatan | சக்தி விகடன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகுடேசுவரன்

ரும்பெண்ணை ஆற்றின் வடகரையை அடைந்திருந்த பாமினி அரசர் இஸ்மாயில் அடில்சா ஆற்றைக் கடப்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்தார். கரும்பெண்ணை ஆற்றைக் கடப்பதுதான் அப்பகுதியில் நடந்த போர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானம் செய்யும் காரணியாக இருந்திருக் கிறது. பேராறான கரும்பெண்ணையைக் கடக்கையில் எதிரிகளின் தாக்குதல் தொடங்கினால், அது கொடூர மானதாக இருக்கும். அதனால் ஆற்றின் வடகரையில் கூடாரம் அடித்துத் தங்கியது பாமினிப் படை.

தம் வருகையை ஒற்றறியும் கிருஷ்ண தேவராயர் கரும் பெண்ணையைக் கடந்து தாக்க வருவார் என்று அடில்சா எதிர்பார்த்தார். ரெய்ச்சூர் முற்றுகையில் தமது போர் முறைகள் அனைத்திலும் மெச்சுதலுக்குரிய நிதானப் போக்கோடு இருந்தார் கிருஷ்ண தேவராயர். இருதரப்பு அரசர்களும் தம் படையணியை எங்கே மோதவிட்டு அடிப்பது என்பதில் முன்கணிக்க முடியாத ராணுவத் தெளிவோடு இருந்தனர். கரும்பெண்ணையின் வடகரை யில் ராயரை எதிர்பார்த்துக் காத்திருந்த அடில்சாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick