குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’ | sri pariyaa Marundeeswarar Temple in Nerkuppai - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2018)

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: சாய் தர்மராஜ்

சிவகங்கை மாவட்டத்தில் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது   பரியாமருது பட்டி. இந்தக் கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது ஸ்ரீபறியா மருந்தீஸ்வரர் ஆலயம். சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கல் திருப் பணி செய்து கட்டப்பட்ட ஆலயம்.

மாட்டுப்பொங்கல் தினத்தன்று இந்தக் கோயிலில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்படும் என்பதால் அன்றைய தினத்தில், கோயிலுக்குச் சென்றோம்.

பிரமாண்டமான மதிலுடன் கூடிய கோயில். கோயிலுக்கு முன்பு, மிக பிரமாண்டமாய்க் கிளை பரப்பி நிற்கும் ஆலமரத்தின் நிழலில், மாட்டுப் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், நந்தவனம் அடங்கிய பெரிய சுற்றுப் பிராகாரம். ராஜகோபுர வாசலைத் தாண்டியதும் நமக்கு நேரே கண்ணில்படுகின்றன அந்த வாசகங்கள்.

‘மருந்து மருந்து அறியா மருந்து அறியா வினை தீர்த்த பறியா மருந்து’  இந்த வரிகளைப் படிக்கும் போதே இந்தத் தலத் தின் மகிமை நமக்கு விளங்குகிறது.