ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிப்ரவரி 13 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

மரியாதை கூடும்

லாப வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்குக் கூடும். அனுபவ அறிவினால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் புதிய வேலை அமையும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.
கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். வீண் அலைச்சல்கள் அதிகமாகும். திடீர் பயணங்களால் செலவுகள் உண்டாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகஊழியர்கள் தங்களின் திறமையை மனதாரப் பாராட்டுவார்கள். கலைத்துறையி னருக்கு வெளிநாட்டு நிறுவனங்களி லிருந்து வாய்ப்பு வரும்.

நினைத்ததை முடிக்கும் தருணமிது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

புது வீடு வாங்குவீர்கள்


சூரியன் 10 -ம் வீட்டில் வலுவாக அமர்ந்ததால், இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மேல் நிலை அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பூர்வ புண்ணியாதிபதி புதன், சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.  பழைய இடத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள்.

தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் உயர்கல்வியைத் தொடர்வார்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தருணமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick