கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம் | Nachiyaar Kovil Garudar Sevai - Sakthi Vikatan | சக்தி விகடன்

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

எம்.ஏ.வி.மதுசூதனன் - படங்கள்: கே.குணசீலன்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்கிற அழகிய வைணவத் திருத்தலத்துக்கு ஒரு தனிச்சிறப்பு. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஊர் அது. ஆம்! திருநறையூர்க் கோயிலில் தாயாருக்குதான் முதலில் அபிஷேகம், நைவேத்தியம், புறப்பாடு எல்லாம். பிறகுதான் பெருமாளுக்கே! அந்த ஊரின் பெயரே “நாச்சியார்கோவில்” என்றுதான் இன்றும் வழங்கப்பெறுகிறது. சரி, அவ்வளவுதானா சிறப்பு என்றால், நம்மை வியக்கவைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இன்னும் பல நிறைந்த தலம் என்கிறது புராணங்கள். சிறிது பார்ப்போம்!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், இவ்வூரில் மேதாவி என்ற ஒரு மகரிஷி வாழ்ந்துவந்தார். அவர் மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென விரும்பினார். அதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனைகள் செய்தார். அவருடைய பிரார்த்தனைக்கு இரங்கி, மஹாலக்ஷ்மியே அவருக்குக் குழந்தையாக இருக்க விரும்பினார். அதன்படியே அவர் ஒரு நாள், “வஞ்சுள  மரம்” என்றழைக்கப்பட்ட மரத்தின் கீழ் அழகான ஒரு பெண் குழந்தையைக் கண்டார். அதன் காரணமாக அக்குழந்தைக்கு “வஞ்சுளவல்லி” என்று பெயரிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick