அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், திருநெல்வேலிக்குத் தெற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு சீவரமங்கை திருத்தலம். வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் ஆகிய திருப்பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு.

புராணங்கள் இத்தலத்தின் வேறுபல பெயர்களையும் அதற்கான காரணங்களையும் விவரிக்கின்றன. உரோமச முனிவர் தவம் செய்து திருமாலை தரிசித்ததால், உரோமச க்ஷேத்திரம்; ஸ்ரீவரமங்கையாகத் திருமகள் இங்கு வளர்ந்து பெருமாளை மணந்ததால் ஸ்ரீவரமங்கை க்ஷேத்திரம்; ஆதிசேடன் இங்கு தவம் செய்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகனைசேரி எனவும் அழைக்கப்படுகிறது.

ரங்களும் மலைகளும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலை; இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் (நான்கு + ஏரி) நான்குநேரி. அதேபோல், நான்கு ஏரிகளின் கூர்முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் இவ்வூர் அமைந்திருப்பதால் நான் + கூர் + நேரி என்ற பெயர் ஏற்பட்டு, காலமாற்றத்தால் நாங்குநேரி என்றானது எனவும் சொல்வர். வைணவப் பெரியார்கள் இத்தலத்தை `தோத்தாத்ரி' என்றே அழைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick