ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டிசம்பர் 19 முதல் ஜனவரி 2 -ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

போராட்டங்களும் புரட்சிகரமான சிந்தனைகளும் உடைய நீங்கள், தன்னைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என நினைப்பீர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று திக்குத் திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல், பிரச்னைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 9-ம் வீட்டில் அமர்வதால், உங்கள் வாழ்வு ஒளிவெள்ளத்தால் பிரகாசிக்கும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிறுக சிறுகச் சேமித்து ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப் பட்டீர்களே, இப்போது நிறைவேறும்! கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினரே, எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தேடி வரும்.

புதிய பாதையில் பயணித்து சாதிக்கும் நேரமிது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்


வெள்ளையுள்ளமும் வெளிப் படையான பேச்சும் கொண்ட நீங்கள், யார் தயவிலும் வாழாமல், ‘தன் கையே தனக்கு உதவி’ என வாழ நினைப்பவர்கள். செவ்வாயும் புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளின் கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

சகோதரங்கள் மதிப்பார்கள்.  இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்திடுங்கள். யாருக்காகவும் ஜாமீன், சாட்சிக்கையொப்பமிட வேண்டாம். விலையுயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமையோடு  வேலையில் கவனம் செலுத்துங்கள்.  கலைத்துறையினருக்கு அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நேரம் விரைவில் கைகூடும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலமிது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick