ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன? | Is Rama Bridge man-made or myth? - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

டம், வேளை என்கிற இரண்டையும் குறிப்பிட்டு அறம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தர்மசாஸ்திரம் பரிந்துரைக்கும். செயலில் இறங்கும் தறுவாயில், தான் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுவான் இந்தியக் குடிமகன். பாரததேச தவப்புதல்வன் என்று தன்னைக் குறிப்பிடாமல் கங்கை நதி - ராமர் பாலம் என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட தேசத்தில் வாழ்பவன் என்று சொல்வான் அவன் (ஸ்ரீராமசேது கங்கையோர் மத்யபிரதேசே). வேத காலம் தொட்டு இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசத்தின் புனிதமான இரு எல்லைகளில் ராமர் பாலமும் ஒன்று. ராமசேதுவின் பெருமையால், கடலில் நீராடும் துறை அமைதியாக இருப்பதைக் காணலாம். ராமசேதுவின் திருமண்ணை கங்கையில் சேர்ப்பதும், கங்கையின் புனித நீரை ராமநாதனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு. தேசத்தின் உயர்வுக்குப் பெருமை சேர்க்கும் பாலம் அது. சேது, சேதுராமன், சேதுபதி, சேதுநாதன், சேதுலட்சுமி, சேதுராமச்சந்திரன், சேதுமாதவன் என்ற பெயர்கள் தென்னாட்டில் உண்டு.

காசியில் கங்கைக்கரையில் ஈசன் தன் பக்தர் களை ராம நாமத்தை ஓதி ஆட்கொள்கிறார். ராமேஸ்வரத்தில், ராமசேதுக்கரையில் ஈசன் நாமத்தை ஓதி ஆட்கொள்கிறார் ராமன். ராம பக்தர்கள் ராமர் பாலத்தை, ராமர் பாதமாகப் பார்ப்பார்கள். பக்தன் சாளக்கிராமத்தில் ஸ்ரீமந் நாராயணனைக் காண்பான். பாண லிங்கத்தில் ஈசனைக் காண்பான். ஏழுமலையை வேங்கடாசல பதியாகக் காண்பான். ராமாயணத்தில் இடம் பெற்ற ராமர் பாலத்தின் பெருமையை உணர்ந்த ஒரு கவிஞன் ‘சேது பந்தம்’ என்ற தலைப்பில் காவியம் ஒன்று இயற்றியிருக்கிறார். அவர் பெயர் ப்ரவரசேனன். 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவர் என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick