உறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்!

தி.ஜெயப்பிரகாஷ் - படம்: அ.சூர்யபாரதி

ர்மக்கள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை  வனப்பகுதியில் அமைந்திருக்கும் காவல்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று, அங்கேயே உணவு சமைத்து தெய்வத்துக்குப் படையலிட்டு வழிபட்டு, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது பண்டைய வழக்கம். ‘வனபோஜனம்’ என்ற அந்த வழக்கம் இன்றைக்கும் ஒரு கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகச் சொன்ன அன்பர் திருப்பூர் சண்முகம், அதில் கலந்துகொள்ள நமக்கும் அழைப்பு விடுத்தார்.  அத்துடன், அந்தக் கோயிலைப் பற்றிய மகிமைகளையும் அவர் பகிர்ந்துகொள்ள, ஆர்வத்துடன் உடனே புறப்பட்டோம் நாம்.

திருப்பூர் மாவட்டம் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது பரமனூத்து கிராமம். இதன் எல்லையில் அமைந்திருக்கிறது ஊர்மக்களின் காவல் தெய்வமான பரமனூத்து கருப்பராயனின் திருக்கோயில். இந்த ஊருக்குப் பரமனூத்து என்ற பெயர் மகாபாரதக் காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick